பல்லவியும் சரணமும் II - பதிவு 13
சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டுபிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
************************************
1. உள்ளத்தை அள்ளத் தான் நாள் பார்த்தது!
2. அலங்கார தேவி முகம், அடங்காத ஆசை தரும் ...
3. மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பது முடிவுரையாம் ...
4. தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ ...
5. நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க ...
6. கண்களால் உன்னை அளந்தேன், தொட்ட கைகளால் ...
7. தெய்வீகப்பாடல் தாய் சொல்லக் கேட்டு, நான் பாட வந்தேன் ஆனந்தப்பாட்டு ...
8. பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே ...
9. மலர் போன்ற உன்னைக் கண்டால், கவி பாட பஞ்சமா ...
10. வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
11. என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ ...
12. தங்க முகமே, நீ தரையில் வந்த வெண்ணிலா, கன்னி மலரே, நீ மலர்ந்ததென்ன கண்ணிலா ...
**********************************
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
13 மறுமொழிகள்:
உடனடியா நினைவுக்கு வந்தவை..
8. மயக்கும் மாலை பொழுதே நீ போ
10. வரவு எட்டணா, செலவு பத்தணா
Test :)
//10. வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது //
வரவு எட்டணா, செலவு பத்தனா! அதிகம் ரெண்டனா! கடைசியில் குந்தனா குந்தனா குந்தனா!
படம் : பாமா விஜயம்!
அன்புடன் பாலா,
சொன்னதற்காக ஐந்து விடைகள்...
3)ஆடி அடங்கும் வாழ்கையடா..
நீர்குமிழி.
6)உன்னை நான் சந்தித்தேன்..
ஆயிரத்தில் ஒருவன்
8)மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..குலேபகாவலி
9)நாடகமெல்லாம் கண்டேன்..
மதுரை வீரன்
10)வரவு எட்டணா..பாமா விஜயம்
என்னோட பதிவுக்கும் சென்று என் கேள்விகளுக்கும் விடை சொல்லுங்களேன்!
6. உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
10. வரவு எட்டணா செலவு பத்தணா - பாமா விஜயம்
12. காத்திருந்த கண்களே- மோட்டார் சுந்தரம் பிள்ளை
11. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீர பாண்டிய கட்டபொம்மன்
டிஸ்கி: வீட்டம்மாவின் துணையுடன் போட்டது. கிரெடிட் அவருதையது, தவறிருந்தால் என்னுடையது
அன்புடன்,
டோண்டு ராகவன்
10. வரவு எட்டணா , செலவு பத்தணா
-பாமா விஜயம்
4. வேறு இடம் தேடிப்போவாளோ ? இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ ? (சில நேரங்களில் சில மனிதர்கள் - வாணி ஜெயராம்)
5. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப்பார்த்து (நான்கு கில்லாடிகள் - சுசிலா, டி.எம்.எஸ்.)
6. உன்னை நான் சந்தித்தேன் நீ (1000த்தில் ஒருவன் - சுசிலா)
7. மங்கையரில் மகராணி மாந்தளிர்போல் பொன்மேனி
எல்லையில்லா கலைராணி என்னுயிரே யுவராணி (பாலு, சுசிலா)
10. வரவு எட்டணா, செலவு பத்தணா (பாமா விஜயம் - டி.எம்.எஸ்., ஈஸ்வரி குழுவினர்)
5. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (நான்கு கில்லாடிகள்)
6.உன்னை நான் சந்தித்தேன் (ஆயிரத்தில் ஒருவன்)
7. மங்கையரில் மகராணி மாங்கனி போல் (இருளும் ஒளியும்??)
8. மயக்கும் மாலைப் பொழுதே நீ (குலேபகாவலி)
9. நாடகமெல்லாம் கண்டேன் (மதுரை வீரன்)
10. வரவு எட்டணா செலவு பத்தணா (பாமா விஜயம்)
11. இன்பம் பொங்கும் வெண்ணிலா (வீரபாண்டிய கட்டபொம்மன்)
7. மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி
10. வரவு எட்டணா செலவு பத்தணா
இப்போதைக்கு இதத்தான் கண்டுபிடிக்க முடிஞ்சது.
9) நாடகமெல்லாம் கண்டேன், உந்தன் ஆடும் விழியிலே
10) வரவு எட்டனா. செலவு பத்தனா
பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
நானானி, ஜிரா, பாலராஜன் கீதா, திருமொழியான் ஆகியோருக்கு முதல் விஜயம் என்று நினைக்கிறேன் :)
பங்கு பெற்றவர்களில் ஸ்டார் performers, நானானி, பாலராஜன் கீதா, திருமொழியான் ...
டோண்டு கூறிய 12-வது பாடலின் பல்லவி தவறு !
7-வது பாடலின் (மங்கையரில் மகராணி) படம் என் நினைவில் இல்லை, ஜெமினி, முத்துராமன், பாரதி, காஞ்சனா நடித்த படம் என்று ஞாபகம்!
யாரும் கண்டுபிடிக்காதவை 1, 2 மற்றும் 12. பல்லவிகள் கீழே:
1. நாள் நல்ல நாள், உன் இதழில் எழுதும் கவிதை இன்பத்தேன் சிந்தும் நாள்
2. மதனோத்சவம் ரதியோடு தான், ரதி தேவியோ பதியோடு தான் --- படம் --- சதுரங்கம்
12. நேற்று நீ சின்ன பப்பா, இன்று நீ அப்பப்பா --- படம் --- மேஜர் சந்திரகாந்த்
இந்த புதிர் விளையாட்டுக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
//7-வது பாடலின் (மங்கையரில் மகராணி) படம் என் நினைவில் இல்லை, ஜெமினி, முத்துராமன், பாரதி, காஞ்சனா நடித்த படம் என்று ஞாபகம்!//
அப்படம் "அவளுக்கு என்று ஓர் மனம்". சமீபத்தில் 1971-ல் வந்தது. அதே சமயம் ஹிந்தியிலும் இப்படம் செய்யப்பட்டது. அப்போது பம்பாயில் வசித்து வந்த நான் துரதிர்ஷ்டவசமாக அதைப் போய் பார்த்து தொலைத்தேன். அப்படத்தின் பெயர் "துனியா க்யா ஜானே". பாரதி அதே ரோலில் நடித்தார், காஞ்சனா ரோலுக்கு அனுபமா, ஜெமினி ரோலுக்கு பிரேம் கிஷன் என்னும் ஒரு விளக்கெண்ணெய், முத்துராமன் ரோலுக்கு மன்மோஹன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment